ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2019

குப்பைமேனியின் மருத்துவ பலன்கள்

குப்பைமேனி



குப்பைமேனியின் மருத்துவ பலன்கள் 

  • பத்து குப்பைமேனி இலைகளை எடுத்து அதனுடன் ஒரு சிறிய பல் பூண்டு ஒரு கல் உப்பு சேர்த்து அவற்றை கையால் கசக்கும்போது கிடைக்கும் சாற்றை குழந்தைக்கு காலை நேரத்தில் வெறும் வயிற்றில் கொடுத்தால் வாந்தி மூலமாக சளி வெளியேறும். சளி அதிகம் காணப்பட்டால் வாரம் இரண்டு அல்லது  மூன்று நாள் கொடுக்கலாம்.  காய்ச்சல் இருந்தால் தவிர்க்கவும்.








  • குப்பைமேனி இலைகளை வெயிலில் உலர்த்தி நன்கு காய்ந்த பின் அதனை மிக்ஸியில் பொடித்து ஒரு காற்று புகாத பாட்டிலில் அடைத்து வைத்து குழந்தைகளுக்கு சளி இருக்கும் பொழுது ஒரு சுண்டக்காய் அளவு எடுத்து சிறிதளவு தேனில் குழைத்து கொடுத்தால் சளி வெளியேறும். சளியால் நெஞ்சில் உண்டாகும் சத்தமும் குறையும். பெரியவர்களும் இதை செய்யலாம்.







  • குப்பைமேனி இலைகளை எடுத்து நன்கு அரைத்து ஒன்றரை கரண்டி குப்பைமேனி சாந்துடன் அரை கரண்டி கஸ்தூரி மஞ்சள் பொடி கலந்து நான்கு கரண்டி தேங்காய்  எண்ணெயில் நன்கு வதக்கி அதை தினமும் உபயோகப்படுத்தி வந்தால் உடலில் உள்ள எல்லா தோல் நோய்களும் ஒரு வாரத்தில் குணமடையும். 






  • குப்பைமேனி இலை, துளசி இலை, மற்றும் கற்பூரவள்ளி இலை இவை மூன்றையும் சம அளவு எடுத்து ஒரு லிட்டர் நீரில் நன்கு கொதிக்க வைத்து குடித்துவந்தால் சளி,  தும்மல்,  இருமல் குணமடையும்.















அம்மா

அம்மா என்றால் அன்பு. அம்மாவிற்கு ஈடாக எதைக் கொடுத்தாலும் ஈடாகுமோ என்றால் அது சாத்தியமில்லாத ஒன்று.  தனக்கென்று எதையும் எதிர்பார்க்காமல் தன் வாழ்நாள் முழுவதும் தன் குழந்தைகளுக்கென்றே தியாகம் செய்பவள். 



பத்து திங்கள் தன் மகவை வயிற்றில்  சுமந்து பல்வேறு கனவுகளை மனதில் சுமந்து பெற்றெடுக்கும் போது சொல்லொண்ணா துயருற்று வாடிய முகம் தான் சுமந்த குழந்தையை காணும் நொடி தான் பட்ட அனைத்து பாடும் மறந்து ஆனந்த கண்ணீருடன் சிரிப்பவள் தான் அம்மா. 



பெற்ற பிள்ளையை பாராட்டி சீராட்டி வளர்ப்பாள். நல்லொழுக்கங்கள் கற்றுக் கொடுப்பாள். சான்றோரை மதிக்க கற்றுக் கொடுப்பாள். நாடு போற்றும் நல்லவனாக வளர்த்தெடுப்பாள். தன் மகவை நினைத்து தானாகவே மகிழ்ச்சி அடைவார்.  தன் பிள்ளை தவறு செய்தால் கூட என் மகன்/ மகள் அவ்வாறு செய்ய மாட்டான் என்று சாதிப்பாள்.


தன் பிள்ளைக்காக அனைத்தும் இழக்கத் துணிவாள் ஏன் தன் உயிரை பணயம் வைத்து பெற்றெடுத்த பிள்ளைக்காக தன் உயிரையும் தருவாள்.  ஆனால் அந்த தாயை முதியோர் இல்லத்தில் தங்க வைக்கும் பிள்ளைகளே இப்போது ஏராளம்.