அம்மா என்றால் அன்பு. அம்மாவிற்கு ஈடாக எதைக் கொடுத்தாலும் ஈடாகுமோ என்றால் அது சாத்தியமில்லாத ஒன்று. தனக்கென்று எதையும் எதிர்பார்க்காமல் தன் வாழ்நாள் முழுவதும் தன் குழந்தைகளுக்கென்றே தியாகம் செய்பவள்.
பத்து திங்கள் தன் மகவை வயிற்றில் சுமந்து பல்வேறு கனவுகளை மனதில் சுமந்து பெற்றெடுக்கும் போது சொல்லொண்ணா துயருற்று வாடிய முகம் தான் சுமந்த குழந்தையை காணும் நொடி தான் பட்ட அனைத்து பாடும் மறந்து ஆனந்த கண்ணீருடன் சிரிப்பவள் தான் அம்மா.
பெற்ற பிள்ளையை பாராட்டி சீராட்டி வளர்ப்பாள். நல்லொழுக்கங்கள் கற்றுக் கொடுப்பாள். சான்றோரை மதிக்க கற்றுக் கொடுப்பாள். நாடு போற்றும் நல்லவனாக வளர்த்தெடுப்பாள். தன் மகவை நினைத்து தானாகவே மகிழ்ச்சி அடைவார். தன் பிள்ளை தவறு செய்தால் கூட என் மகன்/ மகள் அவ்வாறு செய்ய மாட்டான் என்று சாதிப்பாள்.
தன் பிள்ளைக்காக அனைத்தும் இழக்கத் துணிவாள் ஏன் தன் உயிரை பணயம் வைத்து பெற்றெடுத்த பிள்ளைக்காக தன் உயிரையும் தருவாள். ஆனால் அந்த தாயை முதியோர் இல்லத்தில் தங்க வைக்கும் பிள்ளைகளே இப்போது ஏராளம்.
நன்றி
பதிலளிநீக்கு