வாழ்வளிக்கும் வள்ளலே இறைவா இன்று திருப்பலி நிறைவேற்றும் பங்குத்தந்தை அவர்களை ஆசீர்வதித்து அவர் தனது பணியை திறம்பட செய்ய வேண்டிய அருளையும் ஞானத்தையும் அவருக்கு எப்போதும் வழங்கிடவும் நல்ல உடல் சுகத்தை தர வேண்டியும் உம்மை மன்றாடுகிறோம்
2. கருணைக் கடலே இறைவா மருத்துவர் நோயற்றவருக்கென்று நோய் உள்ளவருக்கே தேவை என்று மொழிந்த இறைவா எமது பங்கில் உள்ள நோயாளிகளை உமது கரத்தில் ஒப்படைக்கிறோம் அவர்களை ஆசீர்வதித்து அவர்கள் நோய்களை குணப்படுத்தி அவர்களுக்கு நல்ல உடல் சுகத்தை அருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
3. வாழ்வளிக்கும் வள்ளலே இறைவா எமது பங்கிலிருந்து வெளியூர்களிலும் வெளிநாடுகளிலும் பணிபுரியும் அனைவரையும் ஆசீர்வதித்தருளும் அவர்கள் எந்த நோய்நொடியுமின்றி நலமுடன் அவர்களது பணிகளை செய்யவும் அவர்களது தொழிலுக்கேற்ற ஊதியம் கிடைக்க செய்யவும் வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4. சிறு பிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள் அவர்களைத் தடுக்காதீர்கள் என்று கூறிய இறைவா எமது பங்கில் உள்ள அனைத்து சிறு பிள்ளைகளையும் அது உமது கரத்தில் ஒப்படைக்கிறோம் அவர்களை ஆசீர்வதித்து அவர்கள் படிப்பிலும் ஞானத்திலும் சிறந்து விளங்கவும் பெற்றோர்கள் பெரியோர்கள் பேச்சை கேட்டு நடக்கும் வரத்தை அளிக்க வேண்டும் என்றும் எதிர்காலத்தில் அவர்கள் சிறந்து விளங்க வேண்டுமென்றும் உம்மை மன்றாடுகிறோம்.
5. உலகை ஆளும் உன்னத இறைவா எமது நாட்டு தலைவர்களை உமது கையில் ஒப்படைக்கிறோம் நீர் அவர்களை ஆசீர்வதித்து அவர்கள் சுயநலம் கருதாது பொதுநலம் கருதி அவர்கள் சேவை செய்ய வேண்டிய அருளை வழங்க வேண்டும் என்று உம்மை மன்றாடுகிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக